வட்டுக்கோட்டையில் குழு மோதல்:இருவர் கைது!



யாழ். வட்டுக்கோட்டை மூளாயில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் மூண்டுள்ளது.கலவரத்தையடுத்து இலங்கை காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளது.

கலவரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் மற்றொரு மோட்டார் சைக்கிள் அடித்து உடைக்கப்பட்டுமுள்ளது.

மோதலின் தொடர்ச்சியாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மீண்டும் சாதிய அடிப்படையிலான குழு மோதல்களை தூண்டிவிட தூதரகங்கள் மற்றும் அதன் முகவர்கள் மும்முரமாக செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 


No comments