செம்மணி இதுவரை 56!



செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய தினமான செவ்வாய்க்கிழமை அகழ்வின் போது நான்கு என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்வகையில் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட  மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை இதுவரை 50 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பதின் மூன்றாம் நாள் அகழ்வுப்பணிகள் இன்று செவ்வாய்கிழமை(14) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றிருந்தது.

இன்றைய அகழ்வில் மனித புதைகுழி அகழும் இடத்தில் துணிகளை ஒத்த சில பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செய்மதிப் படம் மூலம் அடையாளம் காணப்பட்ட பகுதியிலும் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர்,,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையின் ஊழியர்கள் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments