கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறை கூடத்தில் இருந்து முதியவர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த இரத்தினம் ராசு (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலைய சிறை கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் , சிறை கூடத்தில் அவரது ஆடையில் , தூக்கில் தொங்கிய நிலையில் , சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சடலம் மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post a Comment