கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ் . வந்தவர் சடலமாக மீட்பு


கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குருநகர் பகுதியி சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்தவர், குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகின்றார். தனது விடுமுறையை கழிக்க அண்மையில், தனியாக யாழ்ப்பாணம் வந்து அவரது வீட்டில் தங்கியிருந்துள்ளார். 

இந்நிலையில் அவரது உறவினரொருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு சென்ற போது, அவர் வீட்டில் சடலமாக காணப்பட்டுள்ளார். 

அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் , சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். 

No comments