எழுவைதீவு கடலில் மிதந்து வந்த ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள்
யாழ்ப்பாணம் எழுவை தீவு பகுதியில் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுகாவல் நடவடிக்கையின் போது, கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்த பொதியொன்றினை மீட்டு, சோதனையிட்ட போது அதனுள் இருந்து சுமார் 15மில்லியன் ரூபாய் பெறுமதியான 38 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்
Post a Comment