வவுனியாவில் அதிரடி படையின் வாகனம் மோதி இளைஞன் உயிரிழப்பு


வவுனியா - ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி, மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வவுனியாவை சேர்ந்த கண்ணதாசன் திவியன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments