குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது.
மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் சம நேரத்தில் காலை 08 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
1985.05.15 அன்று காலை பல கனவுகளுடன் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணித்தவர்கள் உயிர் நடுக்கடலில் பறிக்கப்பட்டு நான்கு தசாப்த்தங்கள் கடந்து நினைவுகூரும் நினைவு அஞ்சலி நிகழ்வுகளின் போது அனைவரும் கலந்துகொண்டு படுகொலையானவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்குமாறு நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Post a Comment