சுவீடன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!


சுவீடனில் மத்திய பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள ஓரெப்ரோவில் உள்ள ரிஸ்பெர்க்ஸ்கா பள்ளியில் நேற்று செவ்வாய்கிழமை மதியம் 12.33 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேருக்கு அறுவைச் சிகிற்சை செய்யப்பட்டது.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால் பயங்கரவாத நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதையும் அவர்கள் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் ஆம்புலன்ஸ்கள், மீட்புப் படைகள் மற்றும் காவல் படைகள் தயார் நிலையில் இருந்ததாக உள்ளூர் மீட்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 


No comments