வரலாறு:கீழ் இறக்கப்பட்ட இலங்கை கொடி!
இலங்கையின் 77வது சுதந்திர தினமான இன்று அதன் தேசியக்கொடி கீழிறக்கப்பட்டு கறுப்புக்கொடி மாணவர்களால் ஏற்றப்பட்டு கரிநாளாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்படடிருந்தது.
இந்நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இலங்கையின் தேசிய கொடியை இறக்கி துக்க தினத்தை பிரகடனப்படுத்தும் கருப்புக் கொடியை ஏற்றியிருந்தனர்.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் கடந்த ஒரு வார காலமாக இலங்கையின் தேசியக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இம்முறை இலங்கையின் தேசியக்கொடி கீழிறக்கப்பட்டு கறுப்புக்கொடி மாணவர்களால் ஏற்றப்பட்டு கரிநாளாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது
அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்ததனை காணக்கூடியதாக இருந்தது.
Post a Comment