லண்டனில் சிறீலங்காத் தூதரகக்திற்கு முன் போராட்டம்
பிரித்தானியா லண்டனில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகத்திற்கு முன்பாக பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இன்று சிறீலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களுக்கு கரிநாள் என்ற கோசத்துடன் இன்றை போராட்டம் நடந்தது.
அனைத்துலக ரீதியில் நடத்தப்படும் இப்போராட்டம் அனைத்துலக தொடர்பகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு ஆகிய தமிழ்தேசிய அமைப்புக்கள் இணைந்து நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment