கரிநாள்:இணைந்தன தமிழரசு-முன்னணி!



இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் தெற்கில் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட மாறாக வட கிழக்கு தமிழர் தாயகத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன., யாழ்ப்பாணத்தில் நல்லூர் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல்தலைவர்கள் திரண்டு என எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்;ற கோசத்துடன் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நல்லூரில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க தலைமையிலும் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கண்டன பேரணியில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் இணைந்து போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

அதேவேளை கிழக்கில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - செங்கலடி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பேரணியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர்

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன் மற்றும் இ.சிறிநாத், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் வங்கத்தின்  மட்டக்களப்பு தலைவி அ.அமலநாயகி உட்பட ஏழு பேருக்கு மட்டக்களப்பு நீதிமன்ற நியாதிக்க எல்லைக்குகள் பேரணி நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக செங்கலடி நகரில் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




No comments