அனுரவையும் ஆமிதான் இயக்குகின்றதா??
அனுர ஜனாதிபதி கதிரையில் அமர அவருக்கு உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள இராணுவ மற்றும் காவல்துறையினரை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கின்றார் என குற்றச்சாட்டுக்கள் தெற்கில் எழுந்துள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் ஜனாதிபதியின் பரிந்துரையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கோலையாளிகளை தப்பிக்க வைத்த காவல்துறை மற்றும் அதிகாரிகளை விடுவிக்கும் தீர்மானத்தை ஜனவரி 27ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ள சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க (; கடிதம் கிடைத்த 14 நாட்களுக்குள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தன்னிடம் தெரிவிக்குமாறும் அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற முப்படைகள் மன்றத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும், தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற காவல்துறை மன்றத்தின் தலைவரான முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர் ரவி செனவிரத்ன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment