எனக்கு ஒன்றுமே தெரியாது:கோத்தாபாய
ஈஸ்டர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் தயவுசெய்து தனக்கு எதுவும் தெரியாதென முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஆணைய அறிக்கையையும், சிஐடி அதிகாரிகள் அளித்த சாட்சியங்களையும் படியுங்கள். அந்த அறிக்கையில் உள்ளதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது' என்றே கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இதனிடையே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் முட்டாள்கள். அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும், ஐ.எஸ். மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா? எனவும் பிள்ளையான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் ஆயுதப் போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன்.
2015 முதல் 2020 வரைசிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும் எனவும் பிள்ளையான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள் சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் தாக்குதலிற்கான உதவியை பெறுவதற்கு பிள்ளையான் உதவினார் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment