தமிழரசு சரி வராது?
அரசியல் தீர்வு தொடர்பிலான நகர்வான தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது என என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
“இன்று காலை என்னுடன் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே .சிவஞானம் அவர்கள் தொடர்பு கொண்டு, இன்று 27 ம் திகதி மாலை இடம்பெறவிருந்த தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது.
எதிர்வரும் 8 ஆம் திகதி தங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் முடிவினை அறிவிப்பதாகவும் எனக்கு தெரிவித்தார்.
விடயம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதனுடனும் கலந்துரையாடினேன். அதனடிப்படையில் 8 ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னரான தமிழரசுக்கட்சியின் பதிலின் பின்னர் கலந்துரையாடலை மேற்கொள்வது என்று தீர்மானித்துள்ளோம். அந்த விடயத்தை சீ.வீ.கே.சிவஞானம் அவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.” எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்கான அழைப்பினை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே .சிவஞானம் வீடு தேடிச்சென்று முன்னணியின் தலைவர்கள் கையளித்திருந்தனர்.
இதனிடையே நாளை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கவுள்ளது.
Post a Comment