எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் இருந்து வெளியேற மறுத்த மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன்


யாழ்.மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுயேச்சை வேட்பாளரான மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் புதிய நாடாளுமன்ற முதல் நாள் எதிர்க்கட்சித் தலைவருக்கென ஒதுக்கப்பட்ட பாரம்பரிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. 

முதல் அமர்வின் போது நாடாளுமன்றத்தில் உத்தியோக பூர்வ இருக்கை ஏற்பாடுகள் இல்லை. அவர்கள் எங்கும் உட்கார அனுமதிக்கப்படுகின்றனர். இது பாரம்பரிய மாக அவைத் தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற ஊழியர் அதிகாரி ஒருவர் தெரிவித்தபோது மருத்துவர் இராமநாதன் இடத்தை மாற்ற  மறுப்பதை வீடியோ காட்டுகிறது.  

இந்த சம்பவம் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கைகள் குறித்து பலர் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. 

No comments