அனுர அரசிலும் உள்ளக விசாரணையாம்?
மனித உரிமை மீறல்களுக்கு உள்ளக பொறிமுறையின் ஊடாகவே நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
அண்மையில் கூட ஜெனீவா அமர்வு நடைபெற்றது. அங்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. உள்ளக பொறிமுறை ஒன்றின் ஊடாகவே கடந்தகால மனித உரிமை மீ றல்களுக்கு நடவடிக்கை எடுப்போம். உள்ளக பொறிமுறை தொடர்பில் நாங்கள் தற்போது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம், அதாவது நிரூபித்து காட்டியுள்ளோம்.
ஜனாதிபதி பாராளுமன்றில் உரையாற்றுகையில் இனி இந்த நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை என் பதை தெளிவாக கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையும், ஜனாதிபதி தேர்தலையும் நாங்கள் எந்தவொரு வன்முறையும் இல்லாமல் நடத்திக் காட்டியிருக்கின்றோம். பல சர்வதேச அமைப்புக்கள் எங்களை பாராட்டியிருக்கின்றன.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் தொலைபேசியில் உரை யாடினார் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் எங்களுடைய நடவடிக்கைகளை அவர் வெகுவாக பாராட்டினார். ஜெனீவா தீர்மானத்தை முன்னின்று கொண்டுவந்த நாடு அமெரிக்கா ஆகவே நாங்கள் உ ள்ளக பொறிமுறை ஊடாக மனித உரிமைகளை பாதுகாப்போம்.
என்ற நம்பிக்கை தற்போது கட்டியெழுப்பபட்டுள்ளது என்றார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் அவ் வாறு உள்ளக பொறிமுறை ஒன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்போது பிரச்சினைகள் எழாதா? ஏன் கேள்வி எழுப்பியபோது அவ்வாறு ஒன்றும் நடக்காது என்பதில் எமக்கு தெளிவான நம்பிக்கை உள்ளது.
வடமாகாண மக்கள் எமக்கு பாரிய ஆதரவை வழங்கியுள்ளனர்.
வடமாகாண மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் இலங்கையர்களாக முன்நோக்கி செல்வோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இனவாதத்திற்கு இனி இடமில்லை என் ற ஜனாதிபதியின் தீர்மானத்தில் நின்று நாங்கள் பல தீர்மானங்களை எடுப்போம் என்றார்.
Post a Comment