காணி விடுவிப்பு ஒருபுறம்:ஆள்பிடிப்பு மறுபுறம்!



வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின்  ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  சம்பந் துயகொத்தாவ உறுதியளித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை  தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

முகநூல் பதிவு தொடர்பில் இன்று (29.11.2024) வெள்ளிக்கிழமை கைது முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் "காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். அது தொடர்பில் நாம் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம். நிச்சயமாக இந்த விடயத்தில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவோம்.

நாம் ஏற்கனவே சில வீதிகளை விடுவித்துள்ளோம். காணிகளையும் விடுவிப்போம்.  நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்போதும் கரிசனையுடையவர்களாகவே  உள்ளோம்." எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பந் துயகொத்தாவ தெரிவித்துள்ளார்.


 

No comments