370 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்முறையை எதிர்கொள்கின்றனர் - யுனிசெஃப்
18 வயதுக்கு உள்ள 8 பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவு வன்கொடுமையால் பாதிக்கப்படுவதாகக் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (UNICEF) இன்று வியாழனன்று ஒரு அறிக்கையை வெளியிட்டதுஇது உலகம் முழுவதும் சுமார் 370 மில்லியன் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை அனைத்து புவியியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து செல்வதாக அறிக்கை கண்டறிந்துள்ளது. ஆப்பிரிக்காவில் 79 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 75 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 68 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பாதுகாப்பு பலவீனமாக உள்ள பகுதிகளில் பாலியல் வன்முறைகள் அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.
சிறுவர்களும் குறிவைக்கப்படுகிறார்கள் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. 11 பேரில் ஒருவர் அல்லது 240 மில்லியனிலிருந்து 310 மில்லியனுக்கு இடையில், சிறுவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் கற்பழிப்பு அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.
2022 க்கு இடையில் 120 நாடுகளில் இருந்து தரவுகளை எடுத்தது என யுனிசெஃப் தெரிவித்தது.
Post a Comment