சுவீடனில் இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்ததாரரின் அலுவலகம் அருகே துப்பாக்கிச் சூடு!


சுவீடனில் உள்ள கோதன்பர்க் நகரில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்ததாரரின் அலுவலகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இளம் சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதுடன், கொலை முயற்சி மற்றும் மோசமான ஆயுதக் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கு 13 வயது என தெரிவிக்கப்படுகிறது.

No comments