விரட்டியடிக்கப்பட்ட இரேனியஸ் செல்வின்!

இலங்கை பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட பிரபல சிவில் செயற்பாட்டாளர் என தன்னை தானே சொல்லிக்கொள்ளும்

இரேனியஸ் செல்வின் ஒரு வார காலத்தினுள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே நாளை புதன்கிழமை புதிய தலைவராக வி.சகாதேவன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

நோர்வே நாட்டிலிருந்து இலங்கை திரும்பியிருந்த செல்வின் மாறி மாறி ஆட்சியிலிருந்தவர்களை இலக்கு வைத்து பதவிக்காக அலைந்து திரிந்தவராக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். எனினும் வெளியே தன்னை சிவில் செயற்பாட்டாளராகவும் தமிழ் மக்களிற்கு விடிவு பெற்றுத்தரவந்த ஒருவராகவும் காண்பித்து வந்திருந்தார்.

எனினும் ரணில் - மைத்திரி நல்லாட்சி காலம் முதல் பனை அபிவிருத்தி சபை இயக்குநர் சபை உறுப்பினராகவும் அவர் இருந்து வந்துள்ளார்.

எனினும் கடந்த ஜந்து வருடங்களில் நடைபெற்ற பாரிய மோசடிகளை மறைத்து அனுர அரசில் புதிய தலைவர் பதவியை கடந்த வாரம் செல்வின் பெற்றிருந்தார்.

இந்நிலையில் ஊழல் முறைகேடுகள் அம்பலமாகத் தொடங்கியுள்ள நிலையில் இரேனியஸ் செல்வின் ஒரு வார காலத்தினுள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக வி.சகாதேவன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.



No comments