யேர்மனியில் விநியோகம் செய்யும் நபருடன் வெதுப்பக வாகனத்தைத் திருடிய திருடன்


இன்று யேர்மனியின் தெற்கு மாநிலமான  பாடன் வுட்டன்பேர்க் பகுதியில் அமைந்துள்ள சின்ஸ்ஹய்ம் நகரில் வெதுப்பகத்திலிருந்து வணிக நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக சிற்றூர்தி ஒன்றில் வெதுப்பகப் பொருட்கள் ஏற்றப்பட்டு விநியோகம் செய்த போது, திருடன் ஒருவன் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வாகனத்துடன் வெதுப்பகப் பொருட்களையும் திருடியுள்ளான்.

வாகனத்தின் ஓட்டுநர் விநியோகம் செய்வதற்காக வாகனத்தின் பின்பகுதியில் இருந்துள்ளார். ஓட்டுநர் வாகனத்தின் சாவியை வாகனத்தில் விட்டுவிட்டு பொருட்களை விநியோகம் செய்ய வாகனத்தின் பின்புறத்தில் ஏறி உள்ளே இருந்த போது திருடன் வாகனத்தை இயக்கி வாகனத்தைத் திருடியவாறு ஓட்டிச் சென்றான் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருடன் வாகனத்தைத் திருடியவாறு புறப்பட்டபோது விநியோகம் செய்பவர் வாகனத்தில் வெதுப்பகப் பொருட்கள் உட்புறத்தில் இருந்தார்.

திருடன் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது ஒரு இடத்தில் சிறிறு நேரம் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வாகன ஓட்டுநரும் வியோக நபருமான அந்தநபர் வாகனத்தில் பின்புறத்திலிருந்து குதித்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டார்.

திருடன் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளான். பின்னர் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சிறிய சாலையில் வாகனம் தரித்து நிறுத்தப்பட்ட நிலையில் காவல்துறையினரால் வாகனம் கண்டு பிடிக்கப்பட்டது.

திருடனைக் காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் வெதுப்பக உரிமையாளருக்கு பல ஆயிரம் யூரோக்கள் இழப்பீடு ஏற்பட்டது.

No comments