மனப்பிறழ்வு வைத்தியர் எங்கே?



மனநிலை பிறழ்வென பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையின்போது இன்றைய தினம் (30) முன்னிலையாகாத  சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிவான்   உத்தரவிட்டுள்ளாhர்.

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையினுள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

எனினும் பின்னர் இரண்டு சரீர பிணையில் குறித்த வைத்தியர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின்  வழக்கு விசாரணைகள் இன்று புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. மேலும் இரண்டு பிணைதாரர்களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பிணையாளி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலை யாக்குமாறு இலங்கை காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே சுயேட்சையாக தேர்தல் களத்தில் போட்டியிடும் அர்ச்சுனா அணியிலிருந்த பலர் வெளியேறவுள்ளதாக தகவல்கள் இன்று வெளியாகியுள்ளது.


No comments