நிதி குற்றப்புலனாய்வு மீண்டும்!

 


தமிழ் அரசியல் ஆய்வாளர் ஒருவரை உளவு அமைப்பின் உதவி பெற்றிருந்த போது அண்மையில் சிக்க வைத்த நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு செயற்பட தொடங்கியுள்ளது.

இலங்கையினில் நிதிக் குற்ற புலனாய்வு விசாரணைகள் பிரிவை ஐந்து வருடங்களுக்கு பிறகு மீளவும் அமுல்படுத்தி ஊழல் ஆவணங்களை விரைவில் விசாரணை செய்ய தயாராகி வருவதாக சட்ட ஒழுங்கு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி காலத்தில் அமைச்சரவை அனுமதியுடன் நிறுவப்பட்ட நிதிக் குற்ற புலனாய்வு விசாரணைகள் பிரிவு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் செயலிழக்க செய்யப்பட்டது. அதில் பணியாற்றிய அதிகாரிகள் 180 பேரில் 19 பேர் தவிர ஏனைய அதிகாரிகள் அனைவரையும் கோட்டபாய கலைத்திருந்தார்.

அதன் பின்னர், நிதி மோசடி விசாரணைகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.ஆணைக்குழுவோ நிதிக் குற்ற புலனாய்வினர்  மேற்கொண்ட விசாரணைகள் சட்டவிரோதமானவை என தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக ராஜபக்ச தரப்பின் ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட அதன் அதிகாரிகள் 24 மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாணத்திற்கு பணி மாற்றம் செய்ய அப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அனுர அரசு நிதிக் குற்ற புலனாய்வு விசாரணைகள் பிரிவை மீளவும் செயற்படுத்த முன்வந்துள்ளது.

இதனிடையே குறித்த அரசியல் ஆய்வாளரை முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரி சுரேஸ் சாலேயே இறுதியில் காப்பாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது 


No comments