ஐபோன் 13 மற்றும் ஐபோன்15 ஐக் கைவிடுகிறது ஆப்பிள் நிறுவனம்!


நேற்று முன்தினம் திங்கட்கிழமை புதிய ஐபோன் 16 வரிசையை அறிமுகப்படுத்தியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அதன் இரண்டு பழைய ஐபோன் மாதிரிகளின் உற்பத்திகளைக் கைவிடுவதாக  அறிவித்துள்ளது.

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 15 இன் இரண்டு ப்ரோ மாடல்கள் இனி விற்பனைக்கு வராது எனத் தெரிவிக்கப்பட்டது. இனிமேல் iPhone 14, 14 Plus, 15, 15 Plus, iPhone SE மற்றும் புதிய iPhone 16 மாதிகளை ஆப்பிளில் இருந்து நேரடியாக வாங்க முடியும்.

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் ஓய்வு பெரும் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஆப்பிள் கடந்த ஆண்டு ஐபோன் 15 தொடரை அறிமுகப்படுத்தியபோது, ​​அது ஐபோன் 14 இன் ப்ரோ மாடல்களையும் நீக்கியது. 

ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களை நிறுத்தியிருந்தாலும், அவை அனைத்தும் இன்னும் வேறு இடங்களில் உடனடியாகக் கிடைக்கின்றன. Amazon, eBay, Gazelle போன்ற மூன்றாம் தரப்பினரிடம் இருந்து தற்போது வாங்கலாம்.

 IPhone 16 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 சோிஸ் ஆகிய கையடக்க தொலைபேசிகளின் விலைகளை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments