யேர்மனி கேளின் நகரில் வெடிப்பு: கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்தது!


யேர்மனியின் கேளின் (கொலோன்) நகரத்தின் மையப்பகுதியில் இன்று ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக கட்டிடம் ஒன்று கடுமையாகச் தேசமடைந்தது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.50 மணியளவில் கொலோனின் முக்கிய பொழுதுபோக்கு மாவட்டமாக அறியப்படும் Hohenzollernring பகுதியில் உள்ள வேனிட்டி இரவு விடுதியின் நுழைவாயிலில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடித்ததில் பல கண்ணாடி ஜன்னல்கள் வெடித்துச் சிதறியதாகத் தெரிகிறது. வெடிவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இந்த பகுதி இரவு வாழ்க்கைக்கு பெயர் பெற்றது. மேலும் பார்கள் மற்றும் உணவகங்கள் நிறைந்துள்ளன.

கொலோனின் இரண்டு மைய இடங்களான Rudolfplatz மற்றும் Friesenplatz ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு சாலை மூடப்பட்டது, அந்த பகுதியைத் தவிர்க்க குடிமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் இச்சாலை வழிப் போக்குவரத்துகள் மீண்டும் திறக்கப்பட்டதாக காவல்துறை எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ளது.

No comments