யேர்மனி டிரெஸ்டனில் உள்ள பாலம் எல்பே ஆற்றில் இடிந்து விழுந்தது!
![]() |
கரோலா பாலம் டிரெஸ்டனின் இடிந்து விழுந்த காட்சி |
யேர்மனி டிரெஸ்டன் நகரத்தில் உள்ள கரோலா பாலத்தின் ஒரு பகுதி இன்று புதன்கிழமை அதிகாலை 3.08 மணியளவில் இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ட்ரெஸ்டன் நகரத்தில் எல்பே ஆற்றைக் கடக்கும் நான்கு பாலங்களில் இந்த பாலம் ஒன்றாகும். மேலும் இந்த சம்பவம் கிழக்கு யேர்மனிய நகரத்தில் பெரும் போக்குவரத்து நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும் கருதப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் பாலத்தின் மீது யாரும் செல்லவில்லை என்பதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் முக்கிய நீர்வழிப்பாதையில் கார் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டுமே காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது.
பாலத்தைப் பயன்படுத்திய இரண்டு டிரெஸ்டன் டிராம் வழித்தட சேவைகள் குறைக்கபட்டன. அதிகாலை 3:08 இடிந்து விழுவதற்கு 18 நிமிடங்களுக்கு முன்பு கடைசி டிராம் பாலத்தை கடந்து சென்றது.
1895 ஆம் ஆண்டில் முதன்முதலில் இப்பாலம் முடிக்கப்பட்டது. அசல் கரோலா பாலம் இரண்டாம் உலகப் போரின் முடிவில், நெருங்கி வரும் சோவியத் ரஷ்யாவின் படைகள் முன்னேறி வருவதைத் தடுக்க தகர்க்கப்பட்டது. பின்னர்1967 மற்றும் 1971 க்கு இடையில் புனரமைக்கப்பட்டது. இதன் பின்னர் 2019 முதல் 2021 வரை இப்பாலம் புதுப்பிக்கப்பட்டது என்பதும் நினைவூட்டத்தக்கது.
Post a Comment