வாக்களிக்க தயார்!



இலங்கை ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகள் முடிவுறுத்தப்பட்;டு வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முன்னாயத்தங்கள் இடம்பெற்றுவருகின்றது.

சனிக்கிழமை வாக்களிப்பிற்கு ஏதுவாக நாளை வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு மையங்களிற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

இதனிடையே நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் வாக்குப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறான செயல்கள் தேர்தல் சட்டத்தை மீறிய செயலாக கருதப்படும் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை  காலை கூடியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமான மற்றும் சுயாதீனமான தேர்தலாக நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பூரண ஆதரவை வழங்க பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதியால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

No comments