யாழில். டிப்பர் வாகனம் மோதி பாடசாலை மாணவி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற டிப்பர் விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் இந்துக்கல்லூரியில் க.பொ.த உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் வினுதா விஜயகுமார் (வயது 17) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்
திருநெல்வேலி பகுதியில் மாணவி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , வீதியால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வைத்தியசாலையில் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment