மூழ்கியது சீனாவின் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்?


சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானப் பணியின் போது மூழ்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஸ்சோ வகை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் (Zhou-class attack submarine) என்பது சீனாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். 

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அது மூழ்கியதாக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

னாவின் சமீபத்திய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் கட்டுமானத்தின் போது மூழ்கியதாக மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் மாத செயற்கைக்கோள் படங்கள் வுச்சாங் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன்களைக் காட்டியது, அங்கு Zhou-class தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் தற்போது அதைக் காணவில்லை.

இந்த படங்கள் மூலம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் கப்பல் மூழ்கியிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ரொய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்தனர்.

நீர்மூழ்கிக் கப்பலின் தற்போதைய நிலையை சீனா  உறுதிப்படுத்தவில்லை.

நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதை முதலில்  வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது.

No comments