கிளிநொச்சி பசுமை பூங்கா:கூடிய ஆட்திரட்டல் யாரால்?
கடந்த 10ம் திகதி கிளிநொச்சியில் கூட்டப்பட்ட ஈபிடிபி சார்பு ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு கூட்டம் பசுமைப் பூங்காவில் திரட்டப்பட்ட அரசியல் கூட்டத்திற்கு போட்டியாக முன்னாள் ஈபிடிபி பிரமுகர் சந்திரகுமார் ஆதரவு அஜித் பிரேமதாஸா ஆதரவு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் மு.சந்திரகுமார் தரப்புடன் சுமந்திரன் ஆதரவு தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் மேடையேறியமை கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈபிடிபியிலிருந்து வெளியேறி தனக்கான கட்சி ஒன்றை ஆரம்பித்த மு.சந்திரகுமார் சுமார் 8 வருடங்களுக்கு மேல் எவ்வித பதவிகளும் இல்லாமல் மக்கள் செல்வாக்கை திரட்டி காண்பித்துள்ளார்.
குறிப்பாக தனது போட்டி அரசியலாளராக சிறிதரனின் கோணாவில் வட்டாரத்தில் தீவிர செயற்பாட்டாளராக இருந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா என்பவரை சஜித் ஆதரவு கூட்டத்தில் மேடையேறியமை மாவட்டக் கிளையின் பொதுவேட்பாளர் ஆதரவு கூட்ட தீர்மானத்துக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படகின்றது.
இதனிடையே பொது வேட்பாளர் ஆதரவு கூட்டமும் பசுமைப் பூங்காவிலேயே நடைபெறுவதால் கவனத்தை ஈர்த்துள்ளது.
Post a Comment