ஜனாதிபதி வேட்பாளர்:வாய்மூடியிருக்கவும்!



ஏற்கனவே திட்டமிட்டது போன்றே ஜனாதிபதி தேர்தலில் சமூக ஊடகங்கள் தொடர்பிலான நிகழ் நிலை காப்பு சட்டங்களை அமுல்படுத்த ரணில் அரசு முற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வேட்பாளர்கள் தொடர்பில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மற்றவர்கள் தங்கள் கருத்தை அறிய வேண்டிய அவசியம் இல்லை அது பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்களைச் செய்வது மக்களின் தனியுரிமை அல்லது அடையாளத்தில் சில தாக்கங்களையும் சேதத்தையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.


மேலும், இவ்வாறான செயற்பாடுகளினால் இரகசிய வாக்கெடுப்பின் தரமும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இது ஒருவகையான தேவையற்ற செல்வாக்கு எனவும் தெரிவித்தார்.


இது தொடர்பில் எவரேனும் முறைப்பாடு செய்தால், உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், ஏற்கனவே இவ்வாறான செயல்களைச் செய்த பலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments