பெற்றோலிய தலைவர் இராஜினாமா!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி, பெறரோலியக் கூட்டுத்தாபனம், சிலோன் பெற்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் மற்றும் டிரின்கோ பெற்ரோலியம் டெர்மினல் ஆகிய மூன்று நிறுவனங்களின் தலைவர் பதவிகளிலிருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், புதிய அமைச்சருக்கு விருப்பமான சபையொன்றை நியமிக்கும் சுதந்திரத்தை வழங்குவதற்காகவே பதவிகளை இராஜினாமா செய்வதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment