இந்தியா களத்தில்:சி.வி. இல்லை:டெல்லிக்கு பறப்பு!
நாடாளுமன்ற தேர்தலை கையாள மீண்டும் இந்தியா மும்முரமாகியுள்ளது.டெல்லி அழைப்பினையடுத்து கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் டெல்லி புறப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கொழும்பில் மலையக கட்சிகள் உடனான சந்திப்பினை இந்திய தூதரகம் இன்று ஆரம்பித்துள்ளது.
இதனிடையே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் போட்டியிடமாட்டார் என தெரியவருகின்றது. இளையோருக்கு வாய்ப்புகளை வழங்கும் விதமாக தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி தொடர்ந்தும் கட்சிச் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என தெரியவருகின்றது
இதனிடையே தமிழ் தேசியக்கூட்டமைப்பாக போட்டியிட மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ள அதேவேளை தமிழரசுக்கட்சியையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் பொதுக்கட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிட அரியநேத்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.சங்கு சின்னத்தில் போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment