யாழில் சுயேட்சைகள்: கவனம்!

 


இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதன்படி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழுவொன்றினால் வைப்புச் செய்யப்படவேண்டிய வைப்புப் பணம் வெறும் 18,000.00 ரூபாவாக  இருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில், தமிழர்களுடைய வாக்குகளைப் பிரிப்பதற்காக, அதன் மூலமாக தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை குறைப்பதற்காக கண்ணுக்கு புலப்படாத அரசியல் சக்திகள் சுயேட்சைக் குழுக்களை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்குவார்கள் என எச்சரித்துள்ளார் முன்னணி சட்டத்தரணியொருவர்

அவ்வாறு போட்டியிடுபவர்களில் பலருக்கு தேர்தலில் வெற்றிபெறுவதல்ல நோக்கம். தமிழ் விரோத சக்திகளிடமிருந்து பெருந்தொகையான பணத்தினைப் பெற்றுக்கொண்டு தமிழர் வாக்குகளை சிதறடிப்பதே நோக்கம் என தெரிவித்துள்ள முன்னணி சட்டத்தரணி தமிழ் வேட்பாளர்கள் அவர்கள் தொடர்பில் விழிப்புடனிருக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.


No comments