ஹிஸ்புல்லா தலைமையகம் தரைமட்டம்: ஹிஸ்புல்லா தலைவரை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்!
பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்பொல்லாவின் தலைமையகத்தை வெள்ளிக்கிழமையன்று தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது.
தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தாக்குதலுக்கு இலக்கானதாக இஸ்ரேலிய ஊடகங்கள் பல கூறியுள்ளன.
நஸ்ரல்லா பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார், பொதுவாக தெரியாத இடங்களில் இருந்து வீடியோ மூலம் தனது பேச்சுகளுடன் பொதுவில் மிகவும் அரிதாகவே தோன்றுவார்.
தாக்குதலைத் தொடர்ந்து நஸ்ரல்லா பாதுகாப்பாக இருப்பதாக ஈரானின் Tasnim ஏஜென்சியும் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகளாக உள்ளனர். இதில் 17 பேரை இஸ்ரேல் கொன்றுவிட்டது. இன்னும் ஹிஸ்புல்லாவின் தலைவராக உள்ள ஹசன் நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருக்கிறார். இதனால் அவரை தீர்த்து கட்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment