எதிர்கட்சிக்கு வந்தார் அங்கயன்!
வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலய வீதிகளையும் மக்கள் பாவனைக்காக திறப்பது நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மூடப்பட்டிருந்த இரண்டு வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 4 வீதிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான பல வீதிகள்யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - பலாலி வீதி ,அச்சுவேலி வயாவிளான் வயாவிளான் யாழ் விமான நிலைய ஓடுபாதை வீதி மற்றும் காங்கேசன்துறை - கீரிமலை வீதி ஆகியவற்றை திறக்கவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மக்கள் அமைதி மற்றும் இயல்பு நிலைக்கான உறுதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ள சூழலில், வீதிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதால் நல்லிணக்கம் மற்றும் பிரதேச வளர்ச்சி ஆகியன வலுவடையுமென கடிதத்தில் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னைய ஆட்சி காலங்களில் அரச அமைச்சராக இருந்திருந்த அங்கயன் இராமநாதனால் வீதிகளை திறக்க ஏன் முடியாமல் போயிருந்ததென்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment