நிதி அமைச்சர் சார்ள்ஸ்(?) ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு!
சஜித் பிறேமதாசாவிற்கு இலங்கை தமிழரசுக்கட்சி பகிரங்க ஆதரவை நேற்று அறிவித்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளார்.
சந்திப்பின் போது மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் இளைஞர் அணி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுடன் சாள்ஸ் நிர்மலநாதனின் வீட்டில் கலந்துரையாடல் ஒன்றும் ரணிலுடன் இடம் பெற்றிருந்தது.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த மன்னார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களின் முடிவே எனது முடிவு எனவும் மக்கள் யார் பக்கமோ அவர்களின் பக்கமே தான் என்றும்; சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரணில் அரசில் தான் நிதி அமைசச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக சாள்ஸ் தெரிவிக்கும் காணொலி சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
ஏற்கனவே கிழக்கில் ஜனா கருணாகரம் உள்ளிட்ட தமிழீழ விடுதலை இயக்க தலைவர்கள் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழக தலைவர்கள் ரணிலுடன் பின்கதவு உறவை பேணுவதான அறிவிப்பின் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் ஆதரவு கூட்டங்களை அவர்கள் புறக்கணித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Post a Comment