மேயர் வேட்பாளர் மீது நால்காலியால் தாக்குதல்!


பிரேசிலின் சாவ் பாலோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அந்நகரத்திற்கு முதல்வராகப் போட்டியிடும் ஒரு தொலைக்காட்சி விவாதம் நடத்தது. இந்த விவாதத்தில் ஆறு முதல்வர் போட்டியாளர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆறு வேட்பாளர்களில் ஒருவர் திடீரென மற்றொரு வேட்பாளர் மீது உலகத்தினால் செய்யப்பட்ட நாற்காலியால் தாக்கினாார்.

வலதுசாரி அரசியல்வாதியாக மாறிய பாப்லோ மார்கல் மீதே நாற்காலியால் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொலைக்காட்சியில் விவாதத்தை நடத்திய நடுவர் விவாதத்தை நிறுத்தி விளம்பரங்களை போட்டார். பின்னர் பாப்லோ மார்கல்  இல்லாமலே விவாதம் தொடர்ந்தது.

தாக்குதலுக்கு உள்ளான மார்கல் நோயாளர் காவுவண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவருக்கு சுவாச ஆதரவு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

அவர் சுவாசிக்கும்போது வலியை உணர்ந்ததாகவும், அவரது விலா எலும்புக் கூண்டின் அடிப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இன்று திங்கட்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது.  மார்கல் தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு சென்றுள்ளார்.

No comments