சேடமிழுக்கும் மகிந்தவும் களமிறங்கினார்?

 


பஸில் உள்ளிட்டவர்கள் கைவிட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ஒதுக்கிவிடப்பட்டுள்ள ராஜபக்ச பரம்பரையின் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளிற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சர்வதேச சதி மூலமே அரசியலில் இருந்து விரட்டப்பட்டதாக யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களிடையே நாமல் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நல்லை ஆதீன குரு முதல்வரையும் நாமல் ராஜபக்ச சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார்.

வலுவான, ஒன்றுபட்ட எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நோக்கில் உழைக்கும்போது நல்லூர் ஆதீனத்தின் வழிகாட்டுதலையும் ஆசீர்வாதங்களையும் பெறுவது பெறுமதியானதென நாமல் ராஜபக்ச என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான பொதுக்கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொட்டு வேட்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள தொகுதி மட்ட பொதுக்கூட்டங்களுக்கு மேலதிகமாக மாவட்ட மட்ட பொதுக்கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.

இதுநாள்வரை பிரசார பணியில் ஒதுங்கியிருந்த மகிந்த ராஜபக்ச தற்போது மகனுக்காக களமிறங்கவுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments