சந்திரகுமாருக்கு முன்னுரிமை?
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ள நிலையில் சி.சிறீதரன் எதிர் அரசியல் முகாமை சேர்ந்த முன்னாள் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துக் கட்சியின் பொதுச் செயலாளருமான முருகேசு சந்திரகுமாரும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் ஆகியோர் இடையே சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இன்று(02) சந்திப்பு நடைபெற்றது.
தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து, நாடாளுமன்ற தெரிவுக் குழுக்களில் பிரதித் தலைவராகவும் பணியாற்றியவர் சந்திரகுமார்.
2020 பொதுத் தேர்தலில் தான் அங்கம் வகித்த ஈபிடிபி சார்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.
சி.சிறீதரன் அரசியல் போட்டியாளரான சந்திரகுமார் அண்மைக்காலமாக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு நிலைப்பாட்டை பேணிவருகின்றார்.அத்துடன் சஜித்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுமுள்ளார்.
இதனிடையே வவுனியாவில றிசாத் பதியுதீன் மிகப்பெரிய அளவில் சஜித் ஆதரவு கூட்டமொன்றை கூட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பக்கம் சாயவுள்ளதாக கூறப்பட்டு வந்திருந்த நிலையில் றிசாத் பதியுதீன் மிகப்பெரிய அளவில் சஜித் ஆதரவு கூட்டமொன்றை கூட்டியுள்ளார்.
Post a Comment