ஜேவிபி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு!
ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த மாத்தறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே, ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்.
தங்காலை நகரில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக உரை நிகழ்த்தினார்.
நீண்டகாலமாக ஜனதா விமுக்தி பெரமுனவின் செயற்பாட்டாளராக செயற்பட்ட பிரேமசிறி மானகே அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கும் தெரிவானவர்.
பின்னர் அவர் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவுக்கு ஆதரவளித்தார். இவர் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
Post a Comment