ரணில் வெளியே: அனுர-சஜித் போட்டி!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் முன்னணியில் இருப்பதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 3வது இடத்தில் பின்தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
செப்டெம்பர் 22ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது, சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரில் ஒருவர் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார் ” என சர்வதேச ஊடகங்கள் சில அறிக்கையிட்டுள்ளன.
இதனிடையே சஜித் மற்றும் அனுர ஆகியோர் தலா 35 சதவீத வாக்குகளைப் பெற முடியும், அதே நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க 24-25 ஐப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றிபெறும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment