நாமலுக்கு நந்திக்கொடி வழங்கிய நல்லை ஆதீன குருமுதல்வர்


ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த நிலையில் நல்லை ஆதீனத்திற்கு சென்று குருமுதல்வரை சந்தித்தார். 

நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்த நாமல் ராஜபக்ஷ பல்வேறு விடயங்ககளை கலந்துரையாடினார். 

அதன் போது, நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்ஷவுக்கு நினைவாக  நந்திக் கொடி வழங்கப்பட்டது.

No comments