மகனை வெட்டிக் கொன்ற தந்தை


மகனை கத்தியால் வெட்டி படுகொலை செய்ததுடன் , மனைவியையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். 

மாளிகாவ வீதியை சேர்ந்த லஹிரு லக்ஷன் (வயது 26) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். அவரது தயாரான 54 வயதான பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் 

கொழும்பு , இரத்மலானை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குடும்ப தகராறு காரணமாக படுகொலையான இளைஞனின் தந்தையான சந்தேகநபர் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார். 

இந்நிலையில், மகன் மற்றும் அவரது மனைவி வசித்து வந்த வீட்டினுள் அதிகாலை வேளை கத்தியுடன் நுழைந்த நபர் தூக்கத்தில் இருந்த மகன் மற்றும் மனைவியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.

சத்தம் கேட்டு அயல் வீட்டார் விரைந்து படுகாயங்களுடன் காணப்பட்ட இருவரையும் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

இளைஞனின் தயார் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments