ஹமாஸின் தலைவராக யாஹ்யா சின்வார் நியமனம்

 


கடந்த வாரம் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியேவுக்குப் பதிலாக யாஹ்யா சின்வாரை ஹமாஸ் அமைப்பின் ஒட்டுமொத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

2017 முதல், சின்வார் காசா பகுதிக்குள் ஒரு குழுவின் தலைவராக பணியாற்றினார். அவர் இப்போது ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராக மாறுகிறார். இவர் ஹமாஸ் அமைப்பை வழிநடத்துவார்.

மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் தருணத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

No comments