யேர்மனியில் ஹோட்டல் கட்டிடம் இடிந்து விழுந்தது: 2 பேர் பலி! மேலும் பலர் கட்டிடத்தின் அடியில்?
ஜேர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு மேற்கே 100 கிலோமீட்டர்கள் (60 மைல்) தொலைவில் உள்ள மோசல் ஆற்றின் க்ரோவ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஹோட்டல் கட்டிடம் பகுதியளவில் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் சிக்கியிருக்கலாம் என்றும், இரண்டு பேர் இடிபாடுகளுக்கு அடியில் இறந்துள்ளனர் என்றும் நம்பப்படுகிறது.
இடிபாடுகளில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர்கள் புதன்கிழமை காலை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.
முன்னதாக, 2 வயது குழந்தை மற்றும் அதன் பெற்றோர் உட்பட நான்கு பேரை இடிபாடுகளில் இருந்து மீட்கும் மிகவும் கடினமான பணியை தாங்கள் சமாளித்ததாக அவசரகால பணியாளர்கள் கூறியுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் இன்னும் 3 பேர் சிக்கியுள்ளனர், மேலும் அவர்கள் பலத்த காயம் அடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஒரு அடுக்கு இடிந்து விழும் போது கட்டிடத்தில் 14 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஐந்து பேர் காயமின்றி வெளியேறினர்.



Post a Comment