ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில் நோவா லைல்ஸ் வெற்றி பெற்றார்


பாரீஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ்  தங்கம் வென்றார்.

ஜமைக்காவின் கிஷான் தாம்சன் வெள்ளியும், மற்றொரு அமெரிக்க வீரரான பிரெட் கெர்லி வெண்கலமும் வென்றனர்.

9.79 வினாடிகள் என்ற புதிய தனிப்பட்ட சிறந்த நேரத்துடன் தாம்சனை ஒரு நொடியில் ஐந்தாயிரத்தில் ஒரு பங்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2004 ஏதென்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஜஸ்டின் காட்லின் வென்ற பின்னர் இருபது வருடங்கள் கடந்த நிலையில் அமெரிக்கா 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கத்தை வென்றுள்ளது.

No comments