இத்தாலி எட்னா எரிமலை வெடிப்பால் சிசிலியில் விமானப் போக்குரத்து நிறுத்தம்
எட்னா சமீபத்திய வாரங்களில் தீவிர செயல்பாட்டைக் கண்டது, ஜூலை தொடக்கத்தில் இருந்து பல சந்தர்ப்பங்களில் சூடான சாம்பல் மற்றும் எரிமலைக்குழம்புகளை கக்குகிறது.
ஞாயிற்றுக்கிழமை, இத்தாலியின் புவி இயற்பியல் மற்றும் எரிமலைக்கான தேசிய நிறுவனம் எரிமலையில் இருந்து "லாவா நீரூற்று" வெளியேறியதாக அறிவித்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் சிசிலியில் உள்ள எட்னா மலையில் இருந்து எரிமலை செயல்பாட்டினால் விமானங்களின் பறப்புகள் தடைபட்டன.
எரிமலையிருந்து வெளிவரும் சாம்பலும் புகையும் அதிகரித்தால் விமானப் போக்குவரத்துகள் தடைப்பட்டன.
எட்னா மவுண்ட் ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலை, சுமார் 3,324 மீட்டர் (சுமார் 10,900 அடி) உயரம் கொண்டது. இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழப்புகள் மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. 1987 ஆண்டு இந்த எரிமலை வெடிப்பில் இரண்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment