பங்களாதேஷில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் 90 பேர் பலி!
காவல்துறைக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோசமான மோதல்களுக்கு மத்தியில் பங்களாதேஷில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டனர்.
பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி மாணவர் தலைவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளதால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தாக்கியதில் 13 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் சிவில் சர்வீஸ் வேலைகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய மாணவர் போராட்டம், தற்போது ஒரு பரந்த அரசுக்கு எதிரான இயக்கமாக மாறியுள்ளது.
போராட்டக்காரர்களை அகற்ற காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.
இதேநேரம் காவல்துறையினரும் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாளர்களும் போராட்டக்காரர்களை நோக்கி தூப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதால் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் இரவில் ஊரடங்கு உத்தரவு 18:00 முதல் அமுலில் உள்ளது.
Post a Comment