அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மற்றும் சரக்குக் கப்பலைத் தாக்கியழித்த ஹுதிக்கள்


அமெரிக்காவின் ஆளில்லா விமானமான எம்கியூ-9 ரீப்பரை யேமன் வான் பரப்பில் வைத்து ஹுதிப் போராளிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

யேமன் சாடா மாகாணத்தின் வான்பரப்பில் உளவு வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த போது இந்த விமானம் ஹுதிப் போராளிகளின் வான்காப்பு பிரிவினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த அமைப்பின் ஆயுதப்படைகளின் பேச்சாளர் யாஹ்யா சாரீ தெரிவித்தார்.

இந்த விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை மூலமே சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் கூறினார்.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் பல பாகங்களாக சிதறுண்டு காணப்படும் காணொளியும் வெளியாகியுள்ளது.

இதேநேரம் ஹுதி ஆயுதப் படைகளின் கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகளும் ஒரு கூட்டு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன. அதில் அவர்கள் ஏடன் வளைகுடாவில் உள்ள "க்ரோடன்" கப்பலை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் குறிவைத்து தாக்கி அழித்ததாகக் கூறியுள்ளனர்.

No comments